Welcome
We are very happy to welcome you to “learnsourashtri.org”
We are here not only to teach you Sourashtri language, but also a great deal of matters as the 15 kinds of spiritual techniques and Art of living mandatory. We are introducing to you so many other interesting matters too.  To know these things you should learn Sourashtri script first. Because these matters and techniques are given in Sourashtri language. Why have this site given everything in Sourashtri language? The reason is to develop Sourashtri language to the Zenith.  Then a question may arise, why all these things are given only in Sourashtri, if this is given in English or Tamil, it may reach everybody. But as far as we are concerned, first we should follow before preaching everybody.  If we don’t know a thing and do not get the benefit of the Art, how can we preach others? So, we have to learn these first and moreover, another question may again arise, “What if they listen to us or not, let’s preach”, but there is another difficulty that those who are not familiar with our language may think our language is inferior and their language is superior one.  So, they will not listen to us and think what is there in Sourashtri that is not in our language.  So, lets first follow this and be benefited and they will automatically try to quest over knowledge.
In fact all the 15 spiritual techniques are interrelated and they are vey confidential. They are related to each and everything.  So, if you want to know them all, you should just know our Sourashtri script. Then you can know all the 15 techniques.
The Heading of each technique is given below:


1. The Centre point of A Human(Madhyam)
2. Uses of Saliva, Eye as specific dimension, Vocal cord and their features and Avadhan
3.Panche’ndriya  and their features
4. Dharana
5. Yoga nidhra
6. Knowledge in appetite and how to utilise
7. Knowledge of works and planning
8. Achievement of Aim in Life
9. Habits to be neglected
10. Personality development of our Life, Adhistan
11. Karma, Kriya, reaction and solution of the karma
12. Dimensions of Life
13. Athi Neluv (Super sensitivity)
14. Skin and features for Life force
15. Sarvagya Pranayam

The sanctity of life lies in several qualities and faculties like Health(Swasti), Wealth(Aishwaryam), Faith(Shradha), Wisdom(Meta), Honor(Yasha), Consciousness(Pragya), Education(Vidya), Knowledge(Buddhi), Strength(Balam), Tejas, Valor(Veeryam), Long life(Ayush) and so on. These qualities have been inhibited by Sourashtrians for almost 10000 years and more. But they are gradually lost because of the degradation of language and mingling with other languages and lost its purity and originality. To get back these qualities we need to purify our language.
And a very unique feature of this script is Symbols. They are the symbols of ‘COSMIC RECORDS’. They are used for getting a prosperous life with the mentioned qualities above like health, wealth and so on. And this symbol can heal the illness, teach Akshara Vigyan and relieve from Witchcraft.
More over, our ambition is to give all these things in Sourashtri as a primary thing. So after a great deal of hard work, we are giving these in website. More over, these will be recorded that they are discovered by Sourshtrians and by no other people of the world.
So, to follow these techniques, we need Alphabets. In olden days, people wrote Sourashtri language in Tamil scripts, Devanagari(Hindi) scripts.  But a great development was made by Sri.T.M.RAMARAI a century ago. He has made a great deal of hard work to develop the language script and people. He developed the language under his master Sri LAXMANACHARYA and taught them to the people as printed matters technically.  So we are here to follow Sri. T.M.RAMARAI. There is no difficulty in learning this script. But we have made some remarkable changes as line form which is already there in the form of oval or round.
We have tried to write it in line shape with only a few changes to make it more attractive.  We are not changing it at all; we are making it more attractive scientifically and technically with the whole hearted blessings of Sri.T.M.RAMARAI.
Those who are willing to learn Purathana Lipi can learn that and not forced to learn this modernised lipi by us. But if you want to learn Akshara Vigyan and The Symbols, you should learn only through this modernised script which is made attractive with the soul blessings of Sri.T.M.RAMARAI.
You may think that we are developing the language and so finding fault with Sri.T.M.RAMARAI’s work. But we are here not to find fault with him but only to honour him. Because Sri. T.M.RAMARAI’s great deal of hard work should not go in vain. So, we should teach everybody the script of our language to take our language to a higher position. So we should learn language technically.  How each and every language differs and unique in its way, how the formation of language takes place. What is the form if two letters are written alone and what if three, four and so on.  This has also been dealt in this site technically.  As we are learning the language, we should form so many words. If a letter makes no meaning, it will remain a letter. If it gives a meaning, it will become a word. So, we are also discriminating words in nouns, verbs and so on.  For example to denote a sentence, we call it “Vataga”, in sanskrit “Vakyam”.  So we are teaching such words and making sentences also in this site.
In Sourashtri, there are 2 lettered,  3 lettered, 4 lettered words, but many of the words are two and three lettered in Sourashtri, the four and five lettered words are less in numbers. In fact that some of the  4 and 5 lettered words are taken from the Sanskrit and 2 and 3 lettered words are in Sourashtri origin.  To know and learn any language, we should better know the alphabets first.  A language always gets a special place if it is learnt through its own alphabets.  So, to honour our language, we should know the alphabets.  You are here only to develop your language and not to learn.  As we are all native speakers of Sourashtri, we just need to learn alphabets and not language or grammar which is called “Vyakaranam” in sanskrit and “Vata kerni” in Sourashtri.  After learning the language scripts completely, we should think of the linguistics of Sourashtri and we should dissect the language grammatically and technically in nook and corner.
Now, our ambition is not to give grammar but language skill and script. So, we are going to update this website on every fortnight.  We request you all to give your powerful support to develop our language and people and you should show the power of Sourashtri, the Art of living and Spiritual techniques in Sourashtri and so you can learn these techniques.  We promise that if you contact us, surely we will teach you the techniques.  But we request those who ignore the script or language not to contact us.  Those who want to learn only techniques and not language are requested not to contact us.  Those may think what is beneficial in learning the language and they may ignore the power of the language.  We request them to be afar away and keep watching the power of Sourashtri language. Those who think, this site in ours, the language is ours, the script is ours and we are here to develop the language can surely be benefitted by this website.  Moreover, we welcome those who want to learn Sourashti script.  It is difficult to learn the techniques if you are not familiar with sourashtri and we also teach these techniques through BHAVGADGITA, Pathanjali Yoga Soothra, Purusha Suktha and so many other thing having the holiness and we try to give them to you in Sourashtri. We also inform you that it will be some how difficult to agree or understand who believes only in One God. For example, Saivas who pray only Lord Shiva and Ignore Lord Vishnu and Vaishnavas who pray only Lord Vishnu and Ignore Lord Shiva and so on.  We preach these things to the whole mankind and not to a specific sect of people.
We now pray Maha Guru Sarvagya, and his great blessings.  To follow him, we develop an Organisation “Maha Guru Sarvagya Raja Yoga Kendra”. In this Kendra, we have developed a lot of things as we have mentioned before.

                Once again we give our whole hearted welcome to our website, “learnsourashtri.org”.

Enter Website | Not Interest

நல்வரவு உண்டாகுக
சௌராஷ்ட்ர மொழியில் அமைந்திருக்கும் நம் வலைதளத்திற்கு விஜயம் செய்தமைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
நாம் சௌராஷ்ட்ர மொழியை மட்டும் தான் கற்றுத் தர இருக்கிறோம் என்பது மட்டுமல்லாது உலகியல் ரீதியான வாழுதல் முறை மற்றும் 15 விதமான ஆன்மீக நுணுக்க விஷயங்களின் உத்திகள் ஆகியவற்றையும் கற்றுத் தர இருக்கிறோம். மேலும் மனம் விரும்புகின்ற பல புது புது விஷயங்களையும் பயன் தரக் கூடியதுமான விஷயங்களையும் வழங்க உள்ளோம். நீங்கள் இவ்விஷயங்களை அறிந்து கொள்ள செய்ய வேண்டியதெல்லாம் என்னவெனில் சௌராஷ்ட்ர மொழியை முதலில் கற்க வேண்டியதேயாகும். ஏனெனில் இவற்றையெல்லாம் சௌராஷ்ட்ர மொழியிலேயே அதாவது சௌராஷ்ட்ர எழுத்துக்களிலேயே கொடுக்கப்பட்டிருப்பதால் தான்.
ஏன் இவ்வலைதளத்தில் அனைத்தும் சௌராஷ்ட்ர மொழியில் கொடுக்கப்பட்டிருக்கிறதென்றால் சௌராஷ்ட்ர மொழியின் மகத்துவத்தை உணர்த்துவதற்காகவும் உயரிய நிலைக்கு கொணர்வதற்காகவும் தான். மேலும் உங்கள் மனதில், “சௌராஷ்ட்ர மொழியில் கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஷயங்களை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ கொடுக்கப்பட்டிருந்தால் எல்லோருக்கும் போய் சேர்ந்து விடுமல்லவா?” என தோன்றலாம். ஆனாலும் நாம் நம்மை உயர்த்திக் கொண்டு மற்றவர்களை உயர்த்துவதே பெருமை வாய்ந்த விஷயமாகவும் அனுபவப்பூர்வ உண்மையாகவும் இருக்கும்.
ஆனாலும் மற்ற முறையிலும் யோசித்து பார்க்கலாம், மற்றவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ அம்மொழியில் கொடுத்து விடலாமே எனவும் தோன்றலாம். இதிலும், அவர்களுடைய மொழியில் ஏற்கனவே தரப்பட்டுள்ளதைக் காட்டிலும் நீங்கள் குறைவாகவே கொடுத்துள்ளதாக அவர்கள் எண்ணலாம் என்பது நிதர்சனம். ஆகவே நாம் நம் மொழியில் கொடுக்கப்பட்டிருப்பதை புரிந்து கொண்டு முன்னுக்கு வந்தால், இவ்விஷயங்களை தானாகவே புரிந்து கொள்ள மற்றவர் முன் வருவர்.
இந்த 15 வகையான உத்திகள் ஒன்றை ஒன்று சார்ந்தும் பரம ரகசியமானதுமாக உள்ளன. இவற்றை நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் சௌராஷ்ட்ர மொழி எழுத்துக்கள் தெரிந்திருக்க வேண்டியதன் அவசியம் புரியும். இந்த 15 வகையான உத்திகள்:

1. மைய ஜீவன்.
2. உமிழ்நீர் உபயோகம், பார்வையின் கோணத்தின் சக்தி, குரல் சக்தியும் வளர்த்தலும்.
3. ஐம்புலன் மற்றும் அதன் இயல்புகள்
4. தாரணை
5. யோக நித்திரை
6. உணவின் ரகசியமும் அதனை பயன் படுத்தும் முறையும்
7. செயல் திறன் மற்றும் திட்டமிடுதல்
8. வாழ்வின் நோக்கத்தையும், லட்சியத்தையும் அடையும் வழிமுறை
9. புறக்கணிக்க வேண்டிய பழக்க வழக்க முறை
10. ஆளுமைத் திறன் வளர்த்தல்
11. கர்மா, கிரியா, கர்ம பலன் மற்றும் கர்மத்தின் தொடர்ச்சியை அறுப்பதன் ரகசியம்
12. வாழ்வின் பரிமாணம்
13. அதீத உணர்வு நிலை
14. தோல் உணர்வும் அதன் சக்தியின் இயக்க நிலையும்
15. ஸர்வக்ஞ பிராணாயாமம்

மேலும் சௌராஷ்ட்ரர்கள் 10,000 வருடத்திற்கும் மேலாக தனித்துவம் வாய்ந்ததான உடல் நலம், செல்வம், சிரத்தை, ஆத்ம ஞானம், வெகுமானம், கல்வி அறிவு, உடல் மற்றும் மன பலம், தேஜஸ், வீரம், நீண்ட ஆயுள் மற்றும் பலவற்றையும் பெற்றிருந்திருக்கிறார்கள். இவை காலப்போக்கில் சிதைந்து மழுங்கிய நிலையில் ஓரளவிற்கு மட்டுமே நிறைந்த நிலையில் இருக்கிறார்கள்.
இதன் காரணம் என்னவெனில் சௌராஷ்ட்ர மொழியின் சிதைவேயாகும். மேலும் மேற்கூறிய தகுதிகளை மீண்டும் கைவசம் பெற வேண்டுமெனில் நம் மொழியை சீரமைப்பதும் அதனை கடைபிடிப்பதும் அவசியம்.
முன்பு நம் மக்கள் நம் மொழியை தமிழ் எழுத்திலும், தேவநாகரி (ஹிந்தி) எழுத்திலும், தெலுங்கு எழுத்திலும் எழுதி வந்தனர். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு திரு. லக்ஷ்மணாச்சார்யாவின் மாணவரான திரு.தொ. மு. ராமாராய் அவர்களின் உயரிய உழைப்பாலும் கடுமையான முயற்சியாலும் நம் எழுத்துக்களை வார்ப்பு அச்சு மூலம் அச்சிட்டு கற்றுத் தந்து மக்களுக்கு சேவை புரிந்திருக்கிறார்.

 

மேலும் நம் எழுத்துக்களை எல்லாரும் பயன்படுத்தும் விதமாகவும் கவர்ச்சியான முறையிலும் பயில நம் எழுத்துக்களில் திரு. தொ. மு. ராமராய் அவர்களின் ஆத்ம நல்லாசியுடனும் வழிகாட்டுதலின் உதவியுடனும் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். சில மாற்றங்கள் என்றவுடன் எழுத்து வடிவத்தையே மாற்றிவிடாமல் வட்ட வடிவில் உள்ளவற்றை கோடு வடிவமாக மாற்றியமைத்து நம் மக்களின் முக அந்தஸ்துக்கு இணையாக நம் எழுத்துக்களுக்கும் அந்தஸ்த்து உயர்த்தி கவர்ச்சியாகவும் இருக்க செய்திருக்கிறோம்.
மேலும் நம் மொழியின் மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்களின் தனித்துவம் என்னவெனில் பிரபஞ்ச சக்தியின் அமைப்பிலான வடிவமாகும். இவை வாழ்வின் உயரிய பாதைக்கும் மேலும் மேலே குறிப்பிட்ட சிறப்பம்சங்களை பெறவும், சகலவித ஐஸ்வர்யம், யோக தகுதிகளை வளர்த்துக் கொள்ளவும், நோய் நொடிகளை குணப்படுத்தவும் பயன் படுகிறது. மேலும் இவை அக்ஷ்ர விஞ்ஞானம் என்பதை கற்கவும் பில்லி சூனியம் இவற்றிலிருந்து விடு படவும் உதவுகிறது.
மேலும் இவற்றை சௌராஷ்ட்ர மொழியில் கொடுப்பது என்பதே நம் முதல் லட்சியம் ஆகும். இவற்றை கடுமையான முயற்சிக்குப் பிறகு தற்போது வலைதளத்தில் கொண்டு வந்துள்ளோம். உலகில் சௌராஷ்ட்ரர்களிடத்தில் தனித்துவம் வாய்ந்தவைகள் இருப்பது என்பது ஒரு பதிவின் ஆரம்பமாகும்.
ஆகவே இந்த உத்திகளை அறிந்து கொள்ள முதலில் அறிய வேண்டியது எழுத்துப் பயிற்சியாகும்.
மேலும் இவை நம் மக்கள் யாவரும் ஒன்றுபட்டு வாழ வழிவகை செய்யும் வகையிலும் அமைந்துள்ளது.
புராதன எழுத்துக்களையே பயன்படுத்துவேன் என்பவர்கள் இம்முறையை தடையாக கருத வேண்டாம். ஆனால் நீங்கள் அக்ஷ்ர விஞ்ஞானத்தையும் 15 விதமான உத்திகளையும் கற்க விரும்பினால் நிச்சயமாக இப்புதிய வடிவிலான எழுத்துக்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

நாம் இதை செய்ய முனைவது என்னவோ மொழியை உயர்த்தவும்,அந்தஸ்தை பெருக்குவதும் ஆகும்.ஆகையால் திரு.ராமராயின் முயற்சியில் தவறுகளை காண்பது என்பது நம் நோக்கம் அல்ல. மேலும் அவரது சீரிய முயற்சியினையும் கடும் உழைப்பையும்

வீணடிக்கக் கூடாதெனவும் அவரது முயற்சியின் தொடர்ச்சியாக நம் மொழியை உயர்நிலைக்கு கொண்டுவரவும் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.
ஆகவே நம் மொழியின் எழுத்து வடிவத்தையும் வார்த்தையின் அமைவையும் அறிந்து கொள்ள வேண்டும்.
ஒரு மொழியின் சிறப்பு அதனை அதன் எழுத்துக்கள் மூலம் கற்பதில் தான் இருக்கிறது. இரு, மூன்று, நான்கு, ஐந்து எழுத்துகளின் சொல் அமைவு மற்றும் அர்த்தம் கொடுக்கக்கூடியது ‘வத்த’ எனவும்,மேலும் பெயர்ச்சொற்களையும் வினைச்சொற்களையும் எடுத்து காட்டியுள்ளோம்.மேலும் ஒரு வாக்கியம் (சமஸ்கிருதம்) என்ற சொல்லை நம் மொழியில் ‘வத்தக’ எனவும் இலக்கணம் (சமஸ்கிருத சொல் வியாகரணம்) என்ற சொல்லை ‘வடகெர்நி’ என்றும் குறிப்பிட்டிருக்கிறோம்.
இரண்டு மற்றும் மூன்று எழுத்து சொற்கள் நம் மொழி ஆளுமையில் இருந்தும் நான்கு மற்றும் ஐந்து எழுத்து சொற்கள் பெரும்பான்மையாக சமஸ்கிருத ஆளுமையில் இருந்தும் மற்றும் குறைவான சொற்களையே பயன்படுத்துகிறோம் என்பதை உணர்த்தக் கடமை பட்டிருகிறோம்.
நம் நோக்கம் இலக்கணத்தை கற்றுத் தருவதென்பதல்ல. ஏனெனில் நாம் பேசும் மொழியே இலக்கணம் வாய்ந்தவையாக இருக்கிறது. மேலும் கற்றுக் கொள்வது என்பதை விட நாம் நம் மொழி எழுத்துகளில் வார்த்தை அமைகின்ற விதத்தை புரிதலில் கொணர்வதற்கு முயற்சி எடுத்துள்ளோம்.
ஆகவே மொழியையும் மொழியோடு எழுத்துக்களையும் எழுத்தோடு 15 விதமான உத்திகளையும் அடையுமாறு கொடுத்து நம் மொழியின் வல்லமையும் பலத்தையும் காண்பிக்க இருக்கிறோம்.(நீங்கள் கற்றுணர்ந்து காண்பிக்க இருக்கிறீர்கள்)
மேலும் யாரெனும் நம் மொழியின் பற்றின்றி எழுத்தின் பற்றின்றி இதை கற்க முனைவோர்க்கு வழி அடைப்பட்டிருப்பதை தெரிந்து கொள்வீர்கள். மேலும் அவர்கள் நம் வலை தளத்தை அணுகாமல் இருப்பதே நல்லதாகும்.
நம் நோக்கதை புரிந்து நம் மொழி,நம் எழுத்து என்பதை உணர்ந்து கற்க விரும்புவோர்க்கு நம் வலைதளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

நம் மொழியில் வல்லமை குறைந்தோர்க்கு நம் மொழியின் வல்லமையை கூட்ட பகவத் கீதை, பதஞ்சலி யோக சூத்ரம், புருஷ சூக்தம் மற்றும் பலவற்றின் புனிதத்தை எடுத்துரைக்க

கடமை பட்டுள்ளோம். ஒருவனே இறைவன் என்ற தத்துவத்தை உணர்த்தவும் கடமை பட்டுள்ளோம். இது சமயம் சாராத ஒன்றாகும். உதாரணமாக சைவ தத்துவதில் கடவுள் சிவனை வழிபடுவதும் கடவுள் விஷ்ணுவை ஒதுக்குவதும், வைஷ்ணவர்கள் கடவுள் விஷ்ணுவை வழிபடுவதும் கடவுள் சிவனை ஒதுக்குவதுமான முறை போன்று பல.
இது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தையும், சமூகத்தையும் குறிப்பிடுவதல்ல, மேலும் மனித குல மாண்பை வளப்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஸ்ரீ மஹா குரு ஸர்வக்ஞ ஆசியின் உதவியால் “மஹா குரு ஸர்வக்ஞ ராஜ யோக கேந்த்ர” என்ற அமைப்பினை உருவாக்கி மேலே குறிப்பிட்ட சிறப்பம்சங்களை வெளிக்கொணர்வதே நம் நோக்கமாகும்.
மீண்டும் ஒரு முறை நம் வலை தளத்தை பார்வையிட்டமைக்கு மிக்க நன்றி. இதை படித்ததும் நீங்கள் மேலும் உள்ளே செல்ல விரும்பினால் ‘ஆம்” என்பதையும் வேண்டாமெனில் “வேண்டாம் பரவாயில்லை” என்பதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உள்ளே செல்லுங்கள் | வேண்டாம் பரவாயில்லை

Amb AHM\

Now, our ambition is not to give grammar but language skill and script. So, we are going to update this website on every fortnight. We request you all to give your powerful support to develop our language and people and you should show the power of Sourashtri.

Our Activities Now

  • Language Teaching First
  • Then, You get the 15 Techniques in the Sourashtri Language
  • The Language Learning by Parchaya 1 & Parichaya 2 & Thurni 1 & Thurni 2
  • The Techniques and The Language Literacy by BHAGAVATH GEETHA (1 – 18 lessions, seperately )
  • Pathanjali Yoga soothra ( 4 padhas, seperately )
  • Purusha Suktham
Purusha Suktham in Sourashtri  Purusha Suktham in Sourashtri  Bhagavath Geetha Sourashtri  Bhagavath Geetha Sourashtri  Pathanjali Yoga Sutra in Sourashtri  Purusha Suktham in Sourashtri
 

Our Kendra Members

Click to Below Links to See our Kendra Members Details.

View More

On Going Classes

Sourashtri Classes Going on every Sunday at SPVM School behind Sourashtra Hr.Sec.School

View All

Writing Format

How to Write our Script?
Script Writing Animation for your reference..

View All